விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த வீரமணியின் மகள் பவானி, தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அவரது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பவானி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பவானியின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டுச் சுவர் இடிந்து விழுந்த இடத்தையும் பார்வையிட்டார். மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்த பவானியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினார்.














; ?>)
; ?>)
; ?>)