• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2022

தமிழ் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதாவால் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் துவங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் தான் நடித்துள்ள படங்களால் நன்கு அறியப்பட்டவர் நிரோஷா ராதா. 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமான நிரோஷா ராதா, அதன்பிறகு பல வெற்றிப்படங்களிலும் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற படங்களிலும் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நிரோஷா ராதா. 1988முதல் ஆயிரத்து 1995 வரை முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நிரோஷா ராதாவால் துவங்கப்பட்ட இந்த பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புதிய முயற்சியுடன் தனித்துவமான படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இன்னும் பல சிறந்த கம்பெனிகளுடன் இணைந்து நல்ல பல தயாரிப்புகளை இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது.

ஸ்ரீலங்காவிலுள்ள ஸ்வர்ணவாஹிணி தொலைக்காட்சிக்காக 4 மெகா தொடர்களை நிரோஷா ராதா தானே தயாரித்தும் இயக்கியும் உள்ளார். அவரே தயாரித்து நாயகியாகவும் நடித்த ஷக்கலக்க பேபி தொடர் இலங்கை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயராலேயே ரசிகர்கள் மத்தியிலும் அழைக்கப்பட்டார். மேலும் தமிழில் பல முன்னணி சேனல்களில் உயிரே, ஆனந்தி போன்ற தொடர்களை தயாரித்து நடித்தும் உள்ளார்.

நிரோஷா ராதா எப்போதுமே விளையாட்டு போட்டிகளில் வேட்கை கொண்டவராகவே இருப்பவர் என்பதால் அந்த ஆர்வத்தில் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை அவர் துவங்கியுள்ளார். மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் என்பது சென்னையில் போரூருக்கு அருகிலுள்ள கோவூரில் அமைந்துள்ள உள்ள ஒரு டென்னிஸ் விளையாட்டு நகரத்தில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது..

மேலும் இது திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டு விளையாடவுள்ள டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி ஆகும். ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான 90 நட்சத்திரங்கள் இதில் பங்கு கொள்கிறார்கள். ஆறு கேப்டன்கள் இந்த குழுவை வழி நடத்த உள்ளார்கள்.

விஜய் டிவியிலிருந்து மாகாபா, சித்தார்த், சன் டிவியிலிருந்து ஆர்யன், அசார் மற்றும் கோலிசோடா புகழ் கிஷோர் உள்ளிட்டோர் இந்த நட்சத்திர அணியை வழி நடத்த இருக்கின்றனர் லீக் போட்டிகளில் விளையாட உள்ள இந்த அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் முன்னிலை வைக்கும் 2 அணிகள் அரையிறுதி போட்டிக்கும் அதை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கும் முன்னேறுவார்கள்.

இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் மற்றும் பல பரிசுப்பொருட்களும் வழங்கப்பட இருக்கிறது. இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த நிகழ்ச்சியை வழங்கும் எம்ஏஆர்சி (MARC)யுடன் இணைந்து வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையை வழங்க இருக்கிறார்.