• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலை அமைந்துள்ள இடத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Oct 27, 2023
மதுரை மாநகராட்சி கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள  முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலை மற்றும் தெப்பக்குளம் சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் சிலை இடங்களில், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் லி.மதுபாலன்  ஆகியோர் இன்று (26.10.2023) ஆய்வு மேற்கொண்டனர். முத்துராமலிங்கதேவர் ஜெயந்தியை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அவர்களின் பிறந்த நாள் விழா எதிர்வரும் 30.10.2023 அன்று தமிழக அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு,தமிழக அரசின் சார்பாகவும் பல்வேறு தரப்பினர்கள் சார்பாகவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள். முத்துராமலிங்க தேவர் அவர்களின் சிலை அமைந்துள்ள இடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து, மேயர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து , தெப்பக்குளம் சந்திப்பு பகுதியில் உள்ள மருதுபாண்டியர் திருவுருவ சிலை அமைந்துள்ள இடத்திலும் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பாதுகாப்பு வசதி, மின்விளக்கு பொருத்துதல், சாலைகள் சீரமைத்தல், சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள், தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு, மேயர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில், மண்டலத் தலைவர்கள் முகேஷ்சர்மா, சரவண புவனேஸ்வரி,
உதவி ஆணையாளர்கள் வரலெட்சுமி, ஷாஜகான், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் லோகமணி, செந்தாமரைக்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.