• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறையில் ‘சர்க்கார்’ பட பாணியில் கள்ள ஓட்டு..,
நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு..!

Byவிஷா

Feb 19, 2022

மயிலாடுதுறை 10-வது வார்டில் பெண் ஒருவரின் ஓட்டு, கள்ள ஓட்டாக மாறியதால் சற்றுநேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10-வது வார்டு கவிஞர் வேதநாயகம் நகராட்சித் தொடக்கப்பள்ளியில் மூன்று வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்குச்சாவடி எண் 12ட-இல் ஈவேரா தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி செல்வி (55) என்ற பெண் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தான் வாக்கு செலுத்தவில்லை என்று அதிகாரிகளிடம் கூறினார்.
பின்னர் அவரது உறவினர்கள், விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அதிமுகவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் சரியாக அச்சிடப்படவில்லை என்றும், மேலும் வருபவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருவதால் யார் என்று தெரியவில்லை என்று முகவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்தப் பெண்மணிக்கு மாற்று ஓட்டு வழங்கப்பட்டது. இதனால் 20 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.