• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முதுமலை பகுதியில் பூத்துக் குலுங்கும் மே ஃப்ளவர்..!

நீலகிரி மாவட்டம், முதுமலை பகுதியில் மே மாதத்தை வரவேற்கும் விதமாக மே ஃப்ளவர் பூத்துக்குலங்குவது சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் மே மாத தொடக்கத்திலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். முதுமலை பகுதியில் மே மாத தொடக்கத்திலேயே தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் முதுமலை வனவிலங்கு சரணாலயம் பசுமைக்கு திரும்பி உள்ளது.
மே மாதத்தை வரவேற்கும் விதமாக டிலோனிக்ஸ் தாவர வகையைச் சேர்ந்த சிகப்பு வண்ணத்தில் பூக்கும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த மே ஃப்ளவர்
முதுமலை பகுதி சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்குகின்றன பசுமையான காடுகளுக்கு இடையே மரங்களில் சிவப்பு வண்ண பூக்கள் படர்ந்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைகிறார்கள்