கரூர் மாவட்ட அண்ணா தொழில் சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது – திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு சாதனை ஒன்று கடன்கார மாநிலம் மற்றொன்று போதை பொருள் மாநிலமாக மாறிவிட்டது என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு.

கரூர் மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பாக 80 அடி சாலையில் மே தின பொது கூட்டம் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில்
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 1467 கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதுஈரோடு,பல்லடம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தோட்டங்களில் குடியிருக்கும் வயதானவர்களை தாக்கி கொள்ளையடிப்பது வாடிக்கையாகிவிட்டது.

இதுவரை வயதான தம்பதியினர் உட்பட ஏழு பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவரை காவல் துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கஞ்சா,போதை மாத்திரைகள் புழக்கம் தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்க்கை சீரழித்து விட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு சாதனை ஒன்று கடன்கார மாநிலம் ஆகிவிட்டது மற்றொன்று போதை பொருள் மாநிலமாக மாறிவிட்டது என்று தமிழக அரசை குற்றம் சாட்டினார்.