• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் -மதுரை கிளை உத்தரவு

Byகுமார்

Jul 2, 2022

மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளராக வேலையில் சேரும் பொழுது
நான் மக்கள் நல பணியாளராக பணிபுரிந்த முந்தைய காலத்திற்கான முன்னுரிமை,பணித்தொடர்ச்சி ஏதும் கோரமாட்டேன்என சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணையில் தமிழ்நாடு கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலாளர்,மதுரை , தேனி,சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை மேலூரை சேர்ந்த ரவி, தேனியை சேர்ந்த மணி வேலன், சிவகங்கையை சேர்ந்த செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில்,மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அவர்கள் வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்தப்படுவர் என்றும், மதிப்பூதியம் ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதன் அடிப்படையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு,விதிகளுக்கு உட்பட்டு பணி வழங்கப்படுகிறது.08.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் எனும் பணியிடத்தில் பணியில் சேர்வதற்கான ஒரு சம்மத கடிதம் எழுதி பணியில் சேரும் மக்கள் நலப்பணியாளர்கள் கையெப்பம் இட்டு வழங்க வேண்டும்.
அதில், அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு மேற்காணும் பணியில் பணிபுரிய சம்மதம் தெரிவிக்கின்றேன் . மேலும் நான் மக்கள் நலப் பணியாளராக பணிபுரிந்த முந்தைய காலத்திற்கான முன்னுரிமை,பணித்தொடர்ச்சி மற்றும் முந்தைய பணிக்கால பணப்பயன்கள் ஏதும் கோரமாட்டேன் எனவும் சம்மதம் தெரிவிக்கின்றேன் என கையெழுத்து இட வேண்டும் என உள்ளதுஇது ஏற்புடையது அல்லஇவ்வாறு நிபந்தனையுடன் சம்மதம் கேட்கும் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.இந்த மனு நீதிபதி ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது;இது குறித்து கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலாளர்,மதுரை , தேனி,சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.