

பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரெளபதி முர்மு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இதற்கிடையே, தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்திரெளபதி முர்மு இன்று சென்னை வருகிறார். சென்னையில் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து ஆதரவு கேட்கிறார். மேலும் இன்று புதுச்சேரியிலும் அவர் ஆதரவு திரட்டுகிறார். திரெளபதி முர்மு தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை உள்ளிட்ட திமுக கூட்டணியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
