கன்னியாகுமரியில் அழகான கட்டிடக்கலையை கொண்ட,தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 10_ நாட்கள் நடைபெறும்.

திருவிழா காலத்தில் மீன்கள் அதிகமாக கிடைத்து வந்ததால் தேர் திருவிழா நடத்துவதில் சிரமம் இருந்தது,இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்திற்கு திருவிழா மாற்றப்பட்டது. என்றாலும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாதம் திருவிழாவை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும்
செப்டம்பர் மாதம் (23,24) தேதிகளில் இரண்டு நாட்கள் மட்டும்” தேதிப்படி திருவிழா” என்ற பெயரில் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் எதிர் வரும் செப்டம்பர் (23,24) ஆகிய இரண்டு நாட்கள் இந்த ஆண்டும் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவின் நாட்களில் 23_ம்தேதி
காலை.06.30 மணிக்கு ஜெபமாலை ஆராதனையும், நற்கருணை ஆசீர் ஆராதனையும் நடக்கவுள்ளது.

இரண்டாம் நாள் 24_ம் தேதி மாலை 6_ மணிக்கு திருவிழா திருப்பலியும், குழந்தைகளுக்கு முதல் திருவிருந்தும் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மாலை நற்கருணை பவனி,மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கவுள்ளது.
கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயம் தேதிதிப்படி திருவிழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணி
உபால்ட்மரியதாசன், பங்குப் பேரவை துணைத்தலைவர் டாலன்டிவோட்டா,செயலாளர் ஸ்டார்வின் பொருளாளர் ரூபன், துணை செயலாளர் டெனிஸ் டோ மற்றும் இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.