தமிழ்நாட்டில் பல்வேறு வகையான அரசு தரிசு நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருகிற பல லட்சக்கணக்கான மக்கள் பட்டா இல்லாமல் இருக்கிறார்கள். மாநில அரசு அனைவரும் பட்டா வழங்கிட வேண்டும். நிலமற்ற பல லட்சம் விவசாய தொழிலாளிகள் ஏழை மக்கள் சொந்த வீடு இல்லாமல் தவிக்கிறார்கள் அனைவருக்கும் சொந்த வீடு தர வேண்டும்.

பல தலைமுறைகளாக கோயில் மடம் அறக்கட்டளை வக்புக் போர்டு இடங்களில் அடிமனையில் குடியிருப்பவருக்கு சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கும் அறநிலைத்துறை சட்டப்பிரிவு 36 4 படி நிலத்தை சொந்தமாக்கி பட்ட வழங்கிட வேண்டும். அரசாணை 318 செயல் படுத்திட மாநில அரசுடன் உயர்நீதி நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்திட வேண்டுகிறோம்.
இனாமொழிப்பு மற்றும் ரயத்துவாரி மாறுதல் சட்டத்தின்படி பட்டியல் செய்யப்பட்டுள்ள நிலங்களை கண்டறிந்து நேரடியாக உழவடை செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு தனி ஆணையம் உருவாக்க வேண்டும். இதற்கான சிறப்பு திட்டத்தை மாநில அரசு செயல்படுத்திட வேண்டும். வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தை அறிவித்து மாநில அரசு செயல்படுத்த வேண்டும். அதேபோல இன்று தனி நபர்கள் விவசாய விலை நிலங்களை வாங்கி குவிப்பது அதிகரித்துள்ளது. இத்தகைய நில குவியலுக்கு அரசு சட்ட பாதுகாப்பு வழங்குகிறது. மறுபக்கம் தரிசு நிலங்களில் வன நிலங்களில் சாகுபடி செய்கிற வீடு கட்டி வாழுகிற சாமானிய ஏழை மக்களை நில வெளியேற்றம் செய்ய உத்தரவை பிறப்பிக்கிறார்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில பொதுச் செயலாளர் P. திருமால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் கரும்பு சங்க மாநிலத் துணைத் தலைவர் நல்ல கவுண்டர் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் மாவட்ட உதவி தலைவர்கள் பூபதி ராஜேந்திரன் வேலாயுதம் 1500 மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.