• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – காவல் துறை அதிகாரி படுகாயம்

ByP.Kavitha Kumar

Jan 28, 2025

ஸ்ரீநகரின் ஜவஹர் நகரில் அரசு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் காவல்துறை அதிகாரி காயமடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர் தலைநகராக ஸ்ரீநகரின் ஜவஹர் நகர் பகுதியில் அரசு குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் உள்ளூர்வாசிகளும் இணைந்தனர்.

இந்த தீ விபத்தில் ஸ்ரீநகரின் ஜவஹர் நகரில் உள்ள ஊழல் தடுப்புப் பணியகத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் ஹிலால் அகமது காயமடைந்தார். அவர் உடனடியாக சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், மேலும் அவர் நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.