• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

பிரேம்ஜியுடன் கல்யாணமா? அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாடகி வினய்தாவுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தனது அண்ணன் இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் மட்டும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 42 வயதான பிரேம்ஜிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. அவரது குடும்பத்தினர் அவருக்குத் தீவிரமாக பெண் பார்த்து வருகின்றனர். ஆனால் தற்போதுவரையிலும் அந்த முயற்சி கை கூடவில்லை.

இந்த நிலையில் பிரேம்ஜி தனது இன்ஸ்டா பக்கத்தில் பாடகி வினய்தாவுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ‘என்னை உன் பார்வையால் தாங்கி பிடித்திருக்கிறாய், இரவில் உன் கைகளில் நடனமாடுகிறேன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த 2022ம் வருடம் எப்படி இருக்கும் என பிரேம்ஜி இன்ஸ்டாவில் ஃபில்டரோடு ஒரு வீடியோவை பகிர அதில் அவருக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும் என ஜாலியாக வந்திருக்கிறது.

பிரேம்ஜி-வினைதா காதல் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன. இது குறித்து பிரேம்ஜி கருத்து ஏதும் கூறாத நிலையில் பாடகி வினைதா மட்டும் பதில் சொல்லியிருக்கிறார். “நானும் பிரேம்ஜியும் பல ஆண்டு கால நண்பர்கள். எங்களின் புகைப்படங்களை அவ்வப்போது நாங்கள் ஷேர் செய்து கொள்வதுண்டு. அப்படி ஷேர் செய்யும்போது சிலவற்றை நாங்கள் தமாஷாக எழுதிக் கொள்வோம். அப்படித்தான் பிரேம்ஜியும் நேற்றைக்கு எழுதி ஷேர் செய்திருக்கிறார்.
மற்றபடி இதில் காதல், கல்யாணம் என்பதெல்லாம் இல்லை. நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அது நிச்சயமாக பிரேம்ஜியை அல்ல.. என்று சொல்லியிருக்கிறார்.