கரூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழா வருகின்ற 11.05.2025 தேதி முதல் 08.06.2025 வரை நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான அமராவதி ஆற்றில் கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி 28.05.2025 அன்று நடைபெற உள்ளது.

இதில் கரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தர உள்ள நிலையில், கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் அன்று ஒரு நாள் 28.05.2025 மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக 14.06.2025 அன்று சனிக்கிழமை அரசு வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.







; ?>)
; ?>)
; ?>)