• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. திருக்கோவிலுக்கு தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய காணிக்கை பொருட்களை எண்ணப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்றது.

11 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள காணிக்கை பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டன. அதில் ரூ. 41லட்சத்து 16 ஆயிரத்து 058 ரொக்கமும் 80.500 கிராம் பலமாற்று பொன் இனங்களும் மற்றும் – 725 கிராம் வெள்ளிப்பொருட்களும் காணிக்கையாக கிடைத்தது.

காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூர், ராஜபாளையம் , மதுரை, கோவில்பட்டி அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களை சேர்ந்த பக்தர்கள் குழு, சேவா சங்கம், மற்றும் கோயில் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். விருதுநகர் இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் நாகராஜன் மற்றும் இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் இளங்கோவன், ஆகியோர் தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி முன்னிலையில் அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு உத்தரவின் படி உண்டியல் திறப்பு பணிகள் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு கோயில் இணையம் வழியாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காணிக்கை உண்டியல்களை தொடர்ந்து எண்னும் பணி நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.