• Wed. Apr 23rd, 2025

சிவகாசியில் மாரியம்மன் கோவில் திருவிழா..,

ByK Kaliraj

Apr 6, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாரியம்மன் கோவில், திருத்தங்களில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் பங்குனி பொங்கல் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசி மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் சயன கோலத்தில் பல்லக்கு சீர்வரிசையுடன் அம்பாள் ரத வீதி பவனி நடைபெற்றது.

நாள்தோறும் மாரியம்மன் வெள்ளி ஊஞ்சலிலும், சிம்மம், காமதேனு,கைலாச பர்வதம், வேதாளம், வெள்ளிரிஷபம், யானை, குதிரை, அன்னம், போன்ற வாகனங்களிலும் எழுந்தருளி, காலை மற்றும் இரவு வேளைகளில் வீதியுலா நடைபெறுகிறது.

இந்நிலையில் விழாக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இன்று பக்தர்கள் கொடுத்த சீர்வரிசை நிறைந்த வாகனத்துடன் மாரியம்மன் சயன கோலத்தில் அலங்கார பல்லக்கில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருக வழிபட்டனர். மேலும் திருவிழாவை ஒட்டி பள்ளி மாணவியரின் நாட்டியாலயா நிகழ்ச்சி நடைபெற்றது.