கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவர் மாரப்பன் தலைமையில் புகார் கொடுக்க வந்தனர்.

அப்போது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்து வழக்கறிஞர் சங்கத்தின் மாநில தலைவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புகாரளிக்க வந்த தங்களிடம் உள்ளே சென்று என்ன செய்யப் போகிறீர்கள் என்று சிறப்பு எஸ்.ஐ ஒருவர் கேள்வி எழுப்பியதாக சங்கத்தின் மாநில தலைவர் மாரப்பன் குற்றச்சாட்டு தெரிவித்து வாக்குவாதம் செய்தார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த காவல்துறை அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மாரப்பன் சங்க உறுப்பினர்களுடன் புகார் மனு அளிப்பதற்கு உள்ளே சென்றார்.