• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

த.வெ.க.மீதான பொறாமையில் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பர் – நடிகர் சௌந்தர ராஜா..,

Byஜெ.துரை

Mar 18, 2025

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி 16/03/2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் தமிழக முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் சொளந்தர ராஜா கலந்து கொண்டு நோம்பு திறந்து வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சௌந்தர ராஜா,

தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்கும், மண்ணுக்கும் சேவை செய்ய வந்த அரசியல் கழகம். பொறாமை பிடித்த பலர் நம் மீது விமர்சனங்களை முன்வைப்பர். அத்தகைய விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இங்கு தமிழர்கள் யாருக்கு, எந்த பிரச்சனை என்றாலும் தமிழக வெற்றிக் கழகம் தோழர்கள் அவர்களுக்கு முன் நின்று உதவ வேண்டும், என்று தெரிவித்தார்.