• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நிலாவிற்கு இந்தியர்கள் அதிகம் செல்வார்கள்

ByKalamegam Viswanathan

Jan 22, 2025

நிலாவிற்கு மனிதன் செல்லும் போது அங்கே இந்தியர்கள் அதிகம் செல்வார்கள் என மயில்சாமி அண்ணாத்துரை கூறினார்.

இஸ்ரோவும், நாசாவும் இணைந்து செய்யும் புதிய செயற்கைக்கோள் தயாரிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது; கிட்டத்தட்ட 12,000 கோடி மதிப்பீட்டில் உள்ள அந்த செயற்கைகோள் அநேகமாக சில வாரங்களில் விண்ணுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் விண்வெளியில் இருந்து பூமியின் நகர்வுகளை துல்லியமாக காண முடியும் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி..

மதுரை பெருங்குடி அருகே தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு 497 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

உலக அளவில் முன்னணியில் இருக்கக்கூடிய நாடுகளுக்கு சரிசமமாக விண்வெளி ஆராய்ச்சியில் தொலை தொடர்பு செயற்கைக்கோள், இடம் கண்டுபிடிக்கும் செயற்கைக்கோள், நிலவுக்கு செல்வது, செவ்வாய்க்கு செல்லுதல் இதையெல்லாம் தாண்டி நிலவில் அவர்கள் கண்டுபிடிக்க முடியாததை கூட கண்டுபிடித்தோம்.

மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத துருவப் பகுதியில் கூட நாம் வெற்றிகரமாக செயற்கோளை இறங்கி செய்தோம். வரும் காலங்களில் இந்தியர்கள் கூட விண்வெளிக்கு போக முடியும் என்பதற்கான தொழில் நுட்பங்களை மெதுவாக எடுத்து வருகிறோம். அதில் ஆளில்லாத இரண்டு விண் கலங்கள் விண்வெளிக்கு சென்று வந்தது.

பிற்காலத்தில் நிலவுக்கு செல்வதாக இருந்தாலும், விண்வெளி மையங்கள் அமைத்தாலும் இங்கிருந்து சென்று அவற்றுடன் சேர்ந்து கொள்வதற்கும், இணைப்பையும் தாண்டி இந்த செயற்கைக்கோள்கள் அவற்றின் ஆயுள் காலத்திற்குப் பின்பும் கூட அவை உபயோகப்படும்.

தற்போது விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களும் முழுக்க முழுக்க தனியார் துறையால் கட்டமைக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் அரசு துறையை தாண்டி தனியார் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது.

இப்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் அந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும். குலசேகரப்பட்டினத்திலேயே விண் ஏவுதளம் உருவாக உள்ளது .அங்கும் நிறைய தனியார் துறையை சேர்ந்த சிக்கனமாக விண்கலம் தயாரிக்க கூடியவர்கள், விரைவில் லாஞ்ச் செய்வது போன்ற வாய்ப்புகள் உருவாகும்.

நிலவுக்கு மனிதனை அனுப்புவதில் இந்தியாவின் ஆராய்ச்சி நிலை குறித்த கேள்விக்கு:

30, 40 ஆண்டுகளாக நிலவு பக்கம் கூட யாரும் எட்டிப் பார்க்கவில்லை மீண்டும் நிலவிற்கு செல்ல வேண்டும் என சூழல் வந்ததற்கு காரணம் இந்தியா தான். நிலவில் நீர் இருப்பதை இந்தியா கண்டுபிடித்தது தான் காரணம்.

முதலில் சந்திராயன் மூலம் நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்தோம் அது துருவப்பகுதி, அங்கு இறங்க முடியுமா என்கிற சிக்கல் இருந்தது மற்ற நாடுகள் தோல்வி அடைந்தாலும் நாம் சிக்கனமாக துருவப் பகுதியில் இறங்கியும் காண்பித்தோம்.

அதனால்தான் மீண்டும் நிலவில் உள்ள ஹீலியம் 3 என்ற கனிமங்களை எடுப்பதற்கு மற்ற நாடுகள் முயற்சி செய்கிறது. சைனாவும் முயற்சி செய்கிறது, அமெரிக்கா அப்பல்லோவைவிட பல மடங்கு பெரிய திட்டம் வைத்திருக்கிறது.

நிலவில் சென்று திரும்புவதற்கு இல்லை நிலவில் குடி அமைப்பதற்கு. அங்கு விவசாயம் செய்யலாம், நீர் எடுக்கலாம் என்று பெரிய திட்டங்கள் போய்க் கொண்டிருக்கிறது.

ஹீலியம் 3 என்கிற வளத்திற்காக மனிதர்கள் நிலவுக்கு செல்வதற்கும், அங்கு குடியமர்த்துவதற்குமான வாய்ப்புகள் உள்ளது. மனிதர்கள் நிலவிற்கு சென்று அங்கு இருந்தால் தேவைப்படும் என்பதற்காக நோக்கியா நிறுவனம் 4ஜி சேவை வழங்குவதற்காக அமெரிக்காவிடம் 10 மில்லியன் டாலர் அளவில் ஒதுக்கி ஒப்பந்தம் செய்துள்ளது.

விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகள் அங்கு உருவாகிறது. அங்கு இருக்கும் மண்ணை கொண்டு எப்படி கட்டடம் கட்டுவது போன்ற ஆராய்ச்சிகளும் நடைபெறுகிறது.

இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் இந்தியாவின் சந்திராயன் திட்டம். அடுத்து சந்திரான் நாலு செல்கிறது அதில் நிலவில் இறங்கி அங்குள்ள கனிமங்களை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்ய உள்ளோம். எனவே மீண்டும் நிலவிற்கு மனிதன் செல்லும்போது இந்தியர்கள் அதிகம் செல்வார்கள், .
இந்தியாவின் தொழில் நுட்பம் அதிகம் இருக்கும்.

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடி நடப்படும் என்ற ட்ரம் கூறியது குறித்த கேள்விக்கு:

சந்திராயன் இரண்டு, மூன்று போல மங்கள்யானும் அடுத்தடுத்து அனுப்பப்படும். ஆனால் என்னைப் பொறுத்த அளவில் செவ்வாய் கிரகத்தை விட நிலவு நமக்கு அருகில் உள்ளது. நமக்கான கனிமங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் விண்வெளி தொழில் நுட்ப கண்டுபிடிப்பு குறித்த கேள்விக்கு:

கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட 11 இருந்து 12 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஹைபிரிட் ராக்கெட் தயாரிக்கும் போது அதற்கு சிறு சிறு சேர்க்கை கோள்கள் தேவைப்படும் அவற்றை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அறிவியல் துறையில் மாணவர்களை வளர்ப்பதற்காக தயாராகி வருகிறது.

இஸ்ரோவின் அடுத்த அப்டேட் குறித்த கேள்விக்கு:

சில வாரங்களில் இஸ்ரோவும் நாசாவும் சேர்ந்து இங்கிருந்து டெலஸ்கோப் மூலம் விண்வெளியை பார்ப்பது போல விண்வெளியில் இருந்து பூமியை துல்லியமாக பார்ப்பதற்கு 8 மீட்டர் விட்டம் உள்ள செயற்கைக்கோள் தயாராகி வருகிறது. கிட்டத்தட்ட 12,000 கோடி மதிப்பீட்டில் அந்த செயற்கைக்கோள் தயாரிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது .

அநேகமாக ஒன்று இரண்டு வாரங்களில் விண்ணுக்கு அனுப்பப்படும். இதன் மூலமாக பூமியை பற்றி நாம் மேலும் அறிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிலநடுக்கம் போன்றவற்றை கண்டறிய வாய்ப்புள்ளது.

நாசாவும் இஸ்ரோவும் இணைந்து அடுத்த திட்டங்கள் உள்ளதா என்ற கேள்விக்கு:

ஏற்கனவே உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ள நிலையில் இதுவரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பங்கெடுக்காத இந்தியா இந்த முறை பங்கெடுக்கும் என்று நினைக்கிறேன்.

விண் வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் வருகை குறித்த கேள்விக்கு?

அவர்கள் வந்து விடுவார்கள். தனியார் செயற்கைகோள் மூலமாக அவர்கள் அனுப்பப்பட்டார்கள். மனிதர்களை சர்வதேச மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்டது.

முதல் பயணங்கள் எப்போதும் சிறிய சிக்கல்கள் வரும். போகும்போதே சிறிய தடைகள் இருந்தது அதை நிவர்த்தி செய்து புறப்பட்டார்கள்.

அங்கிருந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டு விட்டது, ஆனாலும் அந்த கோளாறுகளுடன் இருந்தால் சரியாக இருக்காது என்பதால் அங்கே இருக்கிறார்கள். எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் அடிக்கடி சென்று வருகிறது அநேகமாக அவர்கள் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சுனிதா வல்லியம்ஸ் திரும்பி வருவதற்கு வாய்ப்பு உள்ளது என மயில் சாமி அண்ணாத்துரை கூறினார்.

சரஸ்வதி நாராயணன் கல்லூரி செயலர் நாராயணன், கல்லூரி முதல்வர் சந்திரன். தாவரவியல் பேராசியர் வாசுதேவன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 497 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்