ஆடியோ வெளியிடுவதற்காக மலேசியா சென்று இருந்தார். அந்த கூட்டத்தை பார்க்கிற போதே அண்டை நாடுகளாக இருக்கிற மலேசியாவிலே வியந்து போகின்ற அளவிற்கு அந்த நிகழ்ச்சி, உலக நாடுகளில் திரும்பி பார்க்கின்ற அளவிற்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதுவரையிலும் மலேசியாவை பொறுத்தவரையிலும் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் மட்டும் தான் ரோட் ஷோ என்று சொல்வார்கள். இந்த முறை இவருக்கே ரோட் ஷோ போவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அவருடைய வரலாற்று நாயகனாக இன்றைக்கு தமிழகத்திலே பவனி வந்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை வேண்டும் என்ற முறையில், பெண்களாக இருந்தாலும் சரி, இளவயதிலே இருக்கின்ற 18 வயதில் இருந்து 35 வயதும் இருக்கின்ற அத்தனை பேரும் ஒருமனதாக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிற காட்சியை நாங்கள் காண்கிறோம்.
பல்வேறு நிகழ்ச்சிக்கு நான் செல்கிற போது ஆர்ப்பரித்து வருகிற கூட்டம், அலை மோதுகிற கூட்டம், 1972 ல் புரட்சித் தலைவரை பார்த்ததைப் போல, அதற்குப் பிறகு 88 ல் புரட்சித் தலைவி அம்மாவை காணுவதைப் போல, இன்று ஒரு மாற்றம் தமிழகத்திலே உருவாகி இருக்கிறது. இது மாற்றம் எதிர்காலத்தில் தமிழகத்தின் வரலாற்றில், அவர் தமிழ்நாட்டுடைய முதலமைச்சராக அமர்வதை மக்கள் சக்தியோடு இணைந்து, அந்த பணிகள் நிறைவேறும் என்ற வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து த.வெ.க – வுடன் இணையணும் என்று சில நிர்வாகிகள் குரல் கொடுத்துட்டே வராங்க. அதை பற்றி உங்கள் கருத்து என்ன? காங்கிரஸ் கட்சியினுடைய நிர்வாகிகள் பல இடங்களிலே இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இதுவரையிலும் அந்த கருத்துக்களைப் பொறுத்தவரையிலும் என்னைப் போன்றவர்களுடைய கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை.
“நீங்க ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை” என்று சொல்லி திருமாவளவன் விமர்சனம் பண்ணிருக்காரு. என்ற கேள்விக்கு ?
ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்லுகிறார்கள். அப்படி என்றால் நாங்கள் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இலங்கை தமிழருக்கு குரல் கொடுத்த சீமான் அங்கே விருந்து உண்டு விட்டு பரிசுப் பொருளை வாங்கி வந்த காலமும் இருக்கிறது; அதை மறந்து விடக்கூடாது.
“காங்கிரஸ் நிர்வாகிகளோட கருத்து உங்களுடைய கவனத்துக்கு வந்தா என்ன முடிவு எடுப்பீங்க சார்?”
“இன்னும் கவனத்திற்கு வரவில்லை. கவனத்திற்கு வந்தால் தான் அதற்கு பதிலளிக்க முடியும்.”
இலங்கை மீனவர்கள் இந்த ராமேஸ்வரம் மீனவர்களைப் பிடிச்சிட்டு போயே இருக்காங்க, இலங்கை கடற்படையினர். அதனால் வந்து
“தமிழக வெற்றி கழகம் இன்னும் குரல் கொடுக்கல” அப்படின்ன மாதிரி குற்றச்சாட்டு இருக்கு. “உண்மை இல்லை. பொதுவாக வந்து ஒரு புதிய இயக்கம் துவங்கி இருக்கிறது. ஒரு வரலாறு படைக்கிற இயக்கம். எது வேண்டுமானாலும் மக்கள் கோரிக்கை வைக்கின்ற போது, அந்த கோரிக்கை ஏற்ப எப்படி நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆய்ந்து அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.”
“அ.தி.மு.க வுடைய, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மேல வந்து தமிழக வெற்றி கழகம் கருத்து இருக்கு…

பாருங்கள், எங்களைப் பொறுத்த வரை தெளிவாக இருக்கிறோம். இவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்கின்றவர் மட்டும் தான் நம்முடைய கூட்டணி இணைய முடியும்.” “பாஜக, ஆர்.எஸ்.எஸ் மேல எந்த விமர்சனங்களும் த.வெ.க வைக்கிறது இல்ல, ஒதுங்கி அமைதியா இருக்காங்க, அவங்களைப் பற்றி விமர்சனம் ” என்ற திருமாவளவனின் கருத்து வேறு. அவருடைய கருத்துக்களை கேட்கின்ற போது, “இதே திராவிட முன்னேற்றக் கழகம் வாஜ்பாய் உடைய அமைச்சரவையில் இருந்த போது என்ன செய்தார் என்பதை திருமாவளவன் தான் விளக்க வேண்டும்.”
“முக்கியமான தலைவர்கள் பொங்கலுக்கு முன்னாடி சேருவாங்க” அப்படின்னு இருக்காங்க. “எந்தெந்த தலைவர்கள்?” “எந்தெந்த கட்சி தலைவர்கள்?” — “பொறுத்து இருங்கள், விரைவில் ஜனவரி முதல் வாரத்துக்குள் அத்தனையும் தெரியும்.”
“புது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் சொல்றாங்க. த.வெ.க வுடைய நிலைப்பாடு என்ன?” — “எல்லோரும் வாழ வேண்டும். எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம்.” “புது புது மக்கள் சந்திப்புல தி.மு.க வை எதிர்க்கிற அளவுக்கு பா.ஜ.க வை ஏன் ? எதிர்க்காம இருக்கிறீங்கன்னு அதனடிப்படையில் திருமாவளவன் சொல்லிருக்காரு.? என்ற கேள்விக்கு
“எங்களைப் பொறுத்தவரையிலும் தெளிவாக சொல்லி இருக்கிறார். நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஈரோடு பொதுக் கூட்டத்திலே பேசுகிற போது இரண்டே கருத்துக்கள் பரிமாறப்பட்டது. அங்கே இருக்கிற லட்சக் கணக்கான மக்களும் அதற்கு கோஷம் அளித்தார்கள். கொள்கை ரீதியாக நாங்கள் எதிர்க்கிறோம். ‘யாரை ?’ அப்படின்னு கேட்டார். சொன்னாங்க தெளிவா. மக்கள் சொன்னார்கள். மக்கள் உணர்வைதான் அவர் பிரதிபலிக்கிறார்.”




