காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதி பாஜக கிளை நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் GNS ராஜசேகரன் உட்பட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் GNS ராஜசேகரன் பேசும்போது, கருவுற்ற தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து தொகுப்பு, பெண் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் வைப்பு தொகை பிறகு அவர்களது படிப்பிற்கு கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, குடும்ப தலைவி உதவித்தொகை, சமையல் சிலிண்டர் மானியம், மருத்துவ காப்பீடு திட்டம், வீடு கட்டும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கான உதவிகள், அதோடு மட்டுமல்லாமல் சென்ற காங்கிரஸ் காங்கிரஸ், திமுக கூட்டணியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து மாதத்தோறும் விலையில்லா அரிசி மற்றும் பண்டிகை காலங்களில் அவர்களுக்கு தேவையான பொருட்களும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வழங்கப்படுகிறது. மத்தியில் ஆளாக்கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மீண்டும் புதுச்சேரியில் அமைத்தால் தான் இது போன்ற அனைவருக்குமான நலத்திட்டங்கள் தொடருமான தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள், புதுச்சேரியிக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார் மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர்களுக்கு தள்ளுவண்டி, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா வழங்கினார்.

நிகழ்ச்சியின் இடையே பிரதமரின் மான்கீபாத் நிகழ்ச்சியும் ஒளிபரப்பபட்டது.
இதனையடுத்து காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிகுட்பட்ட பூமங்கலம், மேலத் தெருவில் உள்ள பாஜக நிர்வாகியான புஷ்பலதாவின் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் கொடுத்த தேனீரை குடித்தார். மேலும் அவர்களது குழந்தைகளை அழைத்து நலம் விசாரித்து, நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளின் போது மாநில பாஜக தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் GNS ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.






