வேலு பிரபாகரன் இயக்கத்தில் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகும் படம் “யார் அந்த சார்” சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் ஒரே கேள்வி
“யார் அந்த சார்”? அந்தக் கேள்வியை தலைப்பாக்கி, படத்தை மிகவும் விறுவிறுப்பாக உருவாகி உள்ளது.

சென்ற வருடம் மதுவுக்கு எதிராக ‘சரக்கு’ என்ற படத்தை எடுத்து, பரபரப்பை உருவாக்கியவர் மன்சூர் அலிகான். எப்பொழுதுமே அவருடைய பேச்சில் அரசியல் இருக்கும். மேலும் சமூக அவலங்களுக்கு எதிராக தனி ஆளாக நின்று குரல் கொடுப்பவர் மன்சூர் அலிகான்.
இலவச பஸ், மாதாமாதம் பணம் கொடுத்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ‘வேலியே பயிரை மேய்கிறது’ என்பது தான் கதை கரு. எதிர்பாராத திருப்பங்களுடன் படம் உருவாகியுள்ளது.
மன்சூர் அலிகான், அனகா, ஸ்வாதி, கிரிஷ்டினா, அனீஷ் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிவடைந்து. விரைவில் ‘சார்’ வெளி வருகிறார்.