• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மணிமுத்தாறு சாகச சுற்றுலா தல மேம்பாடு பணி!

திருநெல்வேலி:மணிமுத்தாறு அணைப் பகுதியில் ரூ.3.59 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைப் பகுதியில் சுற்றுலாத் துறை சார்பில் ரூ.3.59 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் தலைமையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது “தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, 2023-2024 ஆம் அண்டு சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு அணை சாகச சற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் சுற்றுச்சுழல் சுற்றுலா தளமாக மேம்படுத்தப்படும் என அறிவித்தார்கள். அதன்படி தமிழ்நாடு அரசு மணிமுத்தாறு அணை சாகச சற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் சுற்றுச்சுழல் சுற்றுலா தளமாக மேம்படுத்துவதற்கு ரூ.3.59 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று மணிமுத்தாறு அணை பகுதியில் ரூ.3.59 கோடி மதிப்பில் சாகச சற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் சுற்றுச்சுழல் சுற்றுலா தளமாக மேம்படுத்துவதற்கான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. மணிமுத்தாறு அணை பகுதியில் பூங்கா மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகள் அதிகஅளவு வருகை புரிவார்கள். பூங்கா மேம்படுத்தும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் நித்யகல்யாணி, அம்பாசமுத்திரம் நகராட்சி தலைவர் கே.கே.சி பிரபாகர பாண்டியன், வி.கே.புரம் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பரணி சேகர், கல்லிடைகுறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கிபாண்டி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சாலமோன் டேவிட், பாஸ்கர், களக்காடு நகர்மன்ற துணை தலைவர் பி.சி.ராஜன், மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.