மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. கார்த்திகை மாதம் மாலை அணிந்த பக்தர்கள் விரதத்தை துவக்கி தினந்தோறும் இரவு பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

வைகையாற்றில் ஆறாட்டு விழா படி பூஜை புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஐயப்பனை தினந்தோறும் வழிபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து
மண்டல பூஜையொட்டி கண்ணன் என்ற பரசுராமன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க நீர் நிரம்பிய கலசங்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஐயப்ப பகவானுக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்து பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பஞ்சாமிர்தம் சந்தனம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சி அளித்தார். தொடர்ந்து அறுசுவை அன்னதானம் நடைபெற்றது ஏற்பாடுகளை தென்கரை தர்ம சாஸ்தா அய்யப்ப பக்தர்கள் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.




