• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கொலை வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது..,

ByS.Ariyanayagam

Nov 17, 2025

திண்டுக்கல் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியாணை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் அருகே கடந்த 2012-ம் ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் வேடசந்தூர் குன்னாம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜ்(46) என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து ராஜ் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 13 ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது.

இது தொடர்பாக மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ் காவலர் சரவணன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு கேரளாவில் பதுங்கி இருந்த ராஜை கேரளா சென்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.