• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி -தெப்பக்காடு பகுதியில் ஆட்கொல்லி புலி கண்காணிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு பகுதியில் கடந்த வாரம் விறகு எடுக்கச் சென்ற பழங்குடியின மூதாட்டி மாரி என்பவர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து புதர்களை அழித்து கேமரா பொருத்தும் பணி தொடங்கியது.


முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின்படி துணை கள இயக்குனர் வித்யா தலைமையில் தெப்பக்காடு கார்குடி மசனகுடி ஆகிய வனச்சரக வனச்சரகர்கள் மற்றும் வனவர்கள் வனக்காப்பாளர்கள் மூன்று வனச்சரக பகுதிகளிலும் புதர்களை அழித்து 41 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினர். இதில் நான்கு கேமராக்களில் புலியின் நடமாட்டம் தென்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இரவு நேரங்களில் வனச்சாரர்கள் தலைமையில் இரவு நேர ரோந்து பணி நடைபெற்று வருவதாகவும் புலி நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய பலகட்ட முயற்சிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் இனி ஒரு சம்பவம் நடக்காத வண்ணம் வனத்துறையினர் முழுமூச்சில் காடுகளை சுத்தம் செய்து ஆட்கொல்லி புலியை கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர்.