கடலூர் மாவட்டம் வேப்பூரில் சேலம் செல்லும் மெயின் ரோட்டில் தனியார் ஹோட்டல் பின்புறம் எவ்வித அரசு அனுமதியின்றி கேஸ் சிலிண்டர் வைத்து விற்பனை செய்வதாக குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் ராபின் ஜெரால்ட் தலைமையில் போலீசார் மணிகண்டன் அடங்கிய குழுவினர் தீடீரென ஆய்வு மேற்கொண்ட போது எவ்வித அரசு அனுமதியின்றி கேஸ் சிலிண்டர்கள் வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 73 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்து பழனிக்குமார் என்பவரையும் கைது செய்தனர்.
