• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

ByT.Vasanthkumar

Feb 18, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது, ஊறல் போடுவது, விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் C.வேலுமணி தலைமையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் லதா மற்றும் அவரது குழுவினர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாட்டுசாரயம் விற்பனை மற்றும் தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றவர்களை தேடி சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 17.02.2024*-ம் தேதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கை.களத்தூர் கிராம பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்துகொண்டிருந்த சின்னதுரை (45) த/பெ அய்யாசாமி , பிள்ளையார் கோவில் தெரு, கொரக்கவாடி, திட்டக்குடி, கடலூர் மாவட்டம். என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 115 லிட்டர் நாட்டு சாராயத்தை கைப்பற்றி அதனை அங்கேயே அழித்தும் அவர் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

*மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அருகில் உள்ள காவல்ன நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலக தொலைப்பேசி எண் 9498100690 என்ற தொலைபேசியினை தொடர்பு கொண்டோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.