வேளச்சேரியில் வீடு புகுந்து வெட்டிய நபர் கைது. செல்போனை விற்று பணத்தை தராததால் ஆத்திரம்.
சென்னை வேளச்சேரி ராஜலட்சுமி நகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார்(39), இவருக்கு மதியழகன் தெருவை சேர்ந்த திருப்பதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24ம் தேதி அசோக்குமாரிடம் ஒரு செல்போனை திருப்பதி கொடுத்து விற்று தரும் படி கொடுத்துள்ளார்.
செல்போனை 3500 ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு அதில் 2000 ரூபாயை மட்டும் திருப்பதியிடம் கொடுத்துள்ளார்.
மீதி பணத்தை தராமல் இழுத்தடித்ததால் ஆத்திரமடைந்த திருப்பதி, வீடு புகுந்து அசோக்குமாரை வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.
பின்னர் தப்பியோடிய திருப்பதியை கைது செய்து, வேளச்சேரி போலீசார் சிறையில் அடைத்தனர்.