• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஓவர் ரொமான்டிக்கில் மகேஷ் மற்றும் கீர்த்தி!

டோலிவுட், கோலிவுட் என தனது இசையால் சினிமா உலகை அதிரவைத்து வருகிறார் இசையமைப்பாளர் தமன். இசையமைப்பாளர் தமனும் பாடகர் சித் ஸ்ரீராமும் இணைந்து விட்டால் அந்த பாடல் ஹிட் என்பதில் மாற்றம் ஏதுமில்லை! மேலும் அதற்கு ஏற்றார் போல், டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து காதலர் தின ட்ரீட்டாக வந்துள்ளது சர்காரு வாரி பாட்டா படத்தின் கலாவதி பாடல்!

கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் ரொமான்டிக் கலந்த மாஸ் படம் சர்காரு வாரி பாட்டா. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக மகேஷ் பாபு, கலாவதி பாடல் லிரிக் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் ரொமான்டிக்கில் கல்யாண களைகட்டும் பாடலாக கலாவதி காதலை சொல்லி வருகிறது. இதில், மகேஷ் பாபுவுக்காக ஸ்பெஷல் இசையை தெறிக்கவிட்டு இருக்கிறார் தமன். வேட்டி சட்டையில், பியானோவை வாசிக்கும் தமனின் காட்சிகள் லிரிக் வீடியோவில் சூப்பரோ சூப்பர்!

தமன் இசை என்றதும் சித் ஸ்ரீராம் இல்லாமலா? தலையில் குடுமியுடன் வித்தியாசமான தோற்றத்தில் பாட்டு பாடி அசத்தி உள்ளார். நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு பெரிய வெற்றியை ருசிக்காமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகேஷ் பாபுவின் கலாவதி பாடல் இன்றே வெளியாகி உள்ள நிலையில், கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்த காதலர் தினமான நாளை அரபிக் குத்து பாடலுடன் தளபதி விஜய் ஆன் தி வே. நாளை காலை 11 மணிக்கு அரபிக் குத்து பாடல் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.