நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அபெக்ஸ் காலனியில் நடைபெறும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகி மற்றும் மகாத்மா காந்தியின் சீடர் அண்ணாச்சாமி சுந்தரம் அவர்கள் பிறந்தநாள் விழா, விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பில் கொண்டாடபட்டது. உருவப் படத்திற்கு இல்லம் தேடிக் தன்னார்வலர் கலைவாணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..,
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வினாடி, வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் தலைவரும், இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் பரிசு புத்தகங்களை வழங்கினர்.,
இனிய விழாவில் பஞ்சாலை சண்முகம், மாலைமலர் மோகன், தீனா, உதவிகரம் அங்கப்பன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் சீடர் அண்ணாச்சாமி சுந்தரம் அவர்கள் பிறந்தநாள் விழா..!
