அம்மா என்பவர் யார்? கஷ்டப்படுவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைத்து அதை உடனடியாக போக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்பவர்தான் புரட்சி தலைவி அம்மா
தன் குழந்தையாக இருந்தாலும், பிறர் குழந்தையாக இருந்தாலும் உடனடியாக ஓடோடிச் சென்று உதவுபவரே அம்மா. இதுதான் இயற்கையாகவே அம்மாவின் நற்குணம்.
ஓர் இல்லத்தரசியாக இருக்கும் அம்மாவிடமே இவ்வளவு வலிமையை வைத்திருக்கும் இயற்கை ஒரு மாநிலத்துக்கே ஜனநாயக அரசியாக இருந்த அம்மாவிடம் எவ்வளவு வலிமையை இறைவன் வைத்திருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்…
தன்னுடைய தாய்மை குணத்தால், இந்த தமிழ்நாடு என்னும் மாநில மக்களெல்லாம் நலம் பெறும் வகையில் மகிழ்ச்சிடையும் வகையில் 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா ஆரம்பித்த திட்டம்தான் அம்மா மருந்தகம்.
அம்மா உணவகம் போலவே அடித்தட்டு மக்களின் நடுத்தர வர்க்கத்து மக்களுக்கான வரப் பிரசாதமாக அமைந்தது அம்மா மருந்தகம் திட்டம்.
பொதுவாகவே நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அப்போதும், இப்போதும் தினமும் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். தினமும் சுகர் மாத்திரை, பிரஷர் மாத்திரை மற்றும் கர்ப்பிணி பெண்கள் என்றால் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மேலும் இதய சிகிச்சை செய்துகொண்டவர்களும் தொடர்ந்து மாத்திரை மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் வாழ்கிறார்கள்.
இவர்கள் தவிர வயதானவர்கள் என்றாலே அவர்களுக்கென அடிக்கடி மருந்து மாத்திரைத் தேவைகள் தொடர்ந்து இருக்கின்றன.
இப்படிப்பட்ட மக்கள் மாதாமாதம் மருந்துக்கென தனியாக கணிசமான பணம் எடுத்து வைக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். உலக அளவில், இந்திய அரங்கில் மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டால் அதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் அத்தியாவசிய மருந்து விலைகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் மக்களை காப்பத்துவதற்கு தான் 2014 ஜூன் மாதம் புரட்சித் தலைவி அம்மா நோயற்ற வாழ்வு ஏழைகள் வாழ்வதற்கு அருமருந்தாக அம்மா உணவகத்தை தொடங்கினார்.
தனியார் மெடிக்கலில் மருந்து விலை அடிக்கடி உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில்… தனியார் கம்பெனிகள் மருந்து விலையை உயர்த்தினாலும் அரசு நடத்தும் அம்மா மருந்தகம்- கடைகளில் MRP அதிகபட்ச சில்லறை) விலையில் 10% தள்ளுபடியில் தரமான மருந்தை வழங்கினார் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா.
இது மாநகரம் முதல் குக்கிராமங்கள் வரை தினந்தோறும் மருந்து சாப்பிட வேண்டிய நிலையில் இருக்கும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், குறிப்பாக வயதானவர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்தது.
மேலும், இந்திய அரசியல் தலைவர்களால் கொள்முதல் செய்து ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க இந்திய சந்தையில் மருந்துகளின் விலையை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான வழிகளை மத்திய அரசு அப்போது ஆராய்ந்து கொண்டிருந்த நேரத்தில்… புரட்சித் தலைவி அம்மாவின் சிந்தனையில் உருவான இந்த அம்மா மருந்தகம் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டமாகவும் பாராட்டப்பட்டது.
அம்மா மருந்தகம் திட்டத்தை மாநிலத்தில் உள்ள கூட்டுறவு கடைகளின் மூலமாக செயல்படுத்தினார் புரட்சித் தலைவி அம்மா. அதாவது தரமான மருந்து மத்திய மாநில அரசு நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை அரசின் கூட்டுறவுத் துறையே கொள்முதல் செய்து சேமிக்கும். கூட்டுறவுத் துறை மூலம் அம்மா மருந்தகங்கள் மூலமாக மக்களுக்கு பத்து சதவிகிதம் தள்ளுபடி விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டடது.
அப்போது இந்த திட்டத்தின் செயல்பாடுகளை கவனித்த அரசு அதிகாரிகள் “இப்படிப்பட்ட அருமையான திட்டமிடலையும் நிர்வாகத்தையும் நாங்கள் அம்மா ஆட்சியைத் தவிர வேறு எப்போதும் பார்த்ததில்லை.
இந்த அம்மா மருந்தகம் திட்டம் தொடங்கப்படுதற்கு முன்பே புரட்சித் தலைவி அம்மாவின் உத்தரவுப்படி விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான பகுதிகளை அடையாளம் காண விரிவான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
எந்தெந்த பகுதிகளில் மருந்துகளின் தேவை அதிகமாக உள்ளது… எந்தெந்த பகுதிகளில் மருந்து கடைகள் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது இல்லாமலோ உள்ளது என்ற ஆய்வு தமிழ்நாடு முழுதும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகளில் அம்மா மருந்தகம் அமைக்க வேண்டும் என்பதை அடையாளம் கண்டோம். இதனால்தான் மக்களின் தேவைக்கேற்ப அம்மா மருந்தகம் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது” என்று வியப்பு தெரிவிக்கிறார்கள்.
மக்கள் எப்படிப் போனால் என்ன என்று மருந்து விற்பனையில் கண்மூடித் தனமான அதிக லாபம் ஈட்டும் போக்குக்கு கடிவாளம் போட்டது அம்மா மருந்தகம் திட்டம்…
அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை மற்ற தனியார் மருந்துக் கடைகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது குறைவுதான். ஆனாலும் கூட… ‘என்னங்க… அம்மா மருந்தகத்துல இந்த மருந்து விலை குறைவுதான்… ஆனா இங்க அதிகமா விக்கிறீங்களே?” என்று மக்களே தனியார் மருந்துக் கடைகளில் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் தனியார் மருந்துக் கடைகள் தாங்கள் அது நாள் வரை கேட்பார் இன்றி அதிக விலைக்கு மருந்து விற்பனை செய்தது.. அம்மா மருந்தகம் மூலம் முடிவுக்கு வந்தது.
அம்மா மருந்தகங்கள் என்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியால், தனியார் மருந்துக் கடைகள் தங்களால் முடிந்த அளவு விலைக் குறைப்பு செய்தார்கள் என்பது அம்மாவின் திட்டத்தால் விளைந்த அளப்பரிய நன்மையாகும்.
மேலும் அம்மா மருந்தகம் மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும், உதவியாகவும் அமைந்தது. மாதாமாதம் மருந்துக்கு பிறரின் கையை எதிர்நோக்கியிருந்த மூத்த குடிமக்களுக்கு மருந்து செலவில் 10%குறைவு என்பது மிகப்பெரிய வரமாக இருந்தது. அதுமட்டுமல்ல, 2014 ம் ஜூன் மாதம் அம்மா மருந்தகம் திட்டம் துவங்கப்பட்ட நிலையில், அடுத்த மாதமே அதாவது 2014 ஜூலை மாதமே… அம்மா’ மருந்தகங்களுக்கு தொலைபேசி அழைப்பு செய்தால் வீட்டுகே சென்று மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
புரட்சித் தலைவி அம்மாவின் இந்த அம்மா மருந்தகம் திட்டம்தான் இந்திய அளவில் 2016 இல் பிரதமர் மோடியின் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் நாடு முழுதும் திறக்கப்பட்டது.
ஏந்த பகுதியில் ஏழைகள்; அதிகமாக உழைப்பவர்கள் வாழ்கிறார்களோ. ஆந்த ஏழைகளின் இல்லங்கள் சமூக நீதித்துறை பாட்டாளிக்ளின் தோழி என தன்னுடைய ஆட்சியின திறமையின் பாராட்டைப் பெற்றார்.
புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியாரின் ஆட்சிக் காலத்தில் அம்மா மருந்தகங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு மக்களுக்கு பலன் அளித்து வற்தது.
2021 இல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் அம்மா மருந்தகம் திட்டம் ஓரங்கப்பட்டு வேண்டுமென்றே பெயர் மாற்றப்பட்டு மக்கள் மருந்தகம் என்ற ஒப்புக்க நடத்தி வருகிறார். அம்மாவின் திட்டத்தில் தனது ஸ்டிக்கரை ஒட்டி ‘முதல்வர் மருந்தகம்’ என்ற பெயரில் அம்மாவின் நலத்திட்டத்தை பெயர் மாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
2026 இல் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி அமையும். புதுப்பொலிவுடன் காட்சி அளித்து மக்களுக்கு அற்புத திட்டமாக மாற்றப்படும். மீண்டும் அம்மா மருந்தகம் திட்டம் புத்துயிர் பெறும்!
மக்கள் நலம் காத்த. சமூக நீதி சிந்தனையாளர் எடப்பாடி ஆட்சியில் புதுப்பொலிவு பெற்று புத்துணர்வு பெறும் தமிழகம். அடுத்து அம்மாவின் மற்றொரு சமூக நீதித் திட்டமான அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் திட்டம் சிறப்பு பற்றி வரும் வாரம் பார்க்கலாம்…
