மகாகவி பாரதியாரின் 104வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி மதுரை பாரதி யுவ கேந்திரா அமைப்பு சார்பில் அவர் ஆசிரியராக பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆடிட்டர் சேது மாதவா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன் மகாகவி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை பாரதி யுவகேந்திரா நிறுவன நெல்லை பாலு செய்திருந்தார்.