விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகாகாளியம்மன் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 28ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இத்திருவிழா தினமும் அம்மனுக்கு பக்தர்கள் விரதமிருந்து அம்மன் பாடல்கள் பாடி கும்மியடித்து வழிபட்டு வந்தனர். மேலும் நேற்று அதிகாலை முதல் கும்பாபிஷேக சிறப்பு நிகழ்வுகள் தொடங்கியது.
மங்கள இசையுடன் கணபதி ஹோமம் செய்து பட்டர்கள் முதல்யாக சாலை பூஜைகள் செய்து தொடங்கி வைத்தனர்.
மீண்டும் அதிகாலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதற்கு முன்னர் அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், விபூதி, ஜவ்வாது, தேன், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்ட கும்பத்துடன் கோவில் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அபிஷேக தீர்த்தத்தை மக்களுக்கு தெளிக்கபட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்ற கவசத்திற்கு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி கோசம் எழுப்பி அம்மனை வணங்கி வழிபட்டனர். பின்னர் மகா காளியம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மானை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் திருக்கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் அவருடன் சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் மற்றும் விசிக மாவட்ட செயலாளர் சந்திரன் மற்றும் பல உள்ளுர் முக்கிய பிரமுகர்கள் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்படுகளை கோவில் நிர்வாகிகள் விழா கமிட்டியர்கள் செய்திருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)