மதுரை மாவட்டம்
மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மகாதானி விருது வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பசுமை செயற்பாட்டாளர் அசோக் குமார் வரவேற்புரை வழங்கினார். மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் மகாதானி விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் 13 பேருக்கு மகாதானி விருது வழங்கப்பட்டது. பாராட்டு விழாவில் ஆடிட்டர் ஐஸ்வர்யா, பணிநிறைவு தமிழ் ஆசிரியை முனைவர் கேத்தரின், தொழிலதிபர் ஞான சிகாமணி, தொழிலதிபர் சரவணன், பிரபு, ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில் அவர்கள் நன்றி கூறினார்.
மகாதானி விருது வழங்கும் விழா








