மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாரி அம்மன் திருக்கோவில் 46ம் ஆண்டுவிழா மற்றும் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.
யாகசாலை பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி கோவில் பூசாரிகள் நிர்வாகிகள் புனித நீரை எடுத்துகோவில் கோபுர கலசத்திற்கு ஊற்றி பிரதிஷ்டை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பூமாரியம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்களும் தீபாரதனைகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பிரபல தொழிலதிபர் ஜி.என் அன்புச்செழியன் ராஜேஸ்வரி, அழகர்சாமி, சந்திரன், மாரியம்மாள் லாரி உரிமையாளர் குட்செட் சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன் மதுரை மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஜெயபாலன், கோவிந்தன் மற்றும் பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பூப்பாண்டி தலைமையில் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.