மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஐயனார் மற்றும் அம்மா சேர் திருக்கோவில் உள்ளது இங்கு கடந்த 25ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது.

தொடர்ந்து மூன்றாம் நாள் நிகழ்ச்சியான இன்று தனக்கன்குளம் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் மற்றும் அம்மாச்சியர் திருக்கோவில் காலை கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்ற கோவில் நிர்வாகிகள் புனித தீர்த்தங்களை கொண்டு கோவிலை சுற்றி வந்து சரியாக 10:30 மணி அளவில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் ஆனது வெகு விமர்சையாக நடைபெற்றது.
அபிஷேக இந்த கும்பாபிஷேக விழாவில் தலக்கங்குளம் மட்டுமின்றி விளாச்சேரி திருப்பரங்குன்றம் நிலையூர் வடிவேல் கரை தென்பெளஞ்சி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம புற மக்கள் ஏராளமானூர் சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட பின்பு அதே புனித நீரை கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மீது தெளிப்பது வழக்கம் ஆனால் இங்கு புனித நீர் என்ற பெயரில் தீயணைப்பு துறையினர் கொண்டு வந்திருந்த வாகனத்தில் இருக்கும் நீரை தீயணைப்பு குழாய் மூலம் கோபுர கலசத்தில் இருந்து பொதுமக்கள் மீது தெளித்தது பேசும் பொருளாகி வருகிறது.