

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வலஞ்சுழி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் செந்தமிழ் ஆகம விதிமுறைப்படி திருக்குட நன்னீராட்டு பெருவிழா 12 ஆண்டுக்கு பின் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இக்கோவிலுக்கு 28 கிராம பஞ்சாயத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன் வாடி மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, குடமுழுக்கு விழாவினை நடத்தினர்.

முன்னதாக , அலுவலக வாயில் முன்பு, 3 கால யாகசால பூஜைகள் நடத்தப்பட்டு, செந்தமிழ் ஆகம முறைப்படி தமிழ் மொழியில் மந்திரங்கள் முழங்க திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அனைவரும் ஆண்கள் ஒரே நிறத்திலும், பெண்கள் ஒரே நிறத்திலும் சீருடை அணிந்து விழாவில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்டோர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


