• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழா..,

ByPuthar Pandian P

Mar 8, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. 2-வது கால , 3-வது கால யாக சாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். அருள்மிகு ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் கோவிலில் உள்ள கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது பக்தர்கள், பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டனர். நிலக்கோட்டை வட்டாரத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் சார்பாக அன்னதானம் நடைபெற்றது.

இவ்விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வி.பி. காளிமுத்து கோவில் செயல் அலுவலர் பி.வீர சிவ பாலன் மற்றும் என். மனோகரன் அ. சுப்ரமணி கு.வடிவேல் சே.வளர்மதி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.