• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ திம்மம்மா கோயிலில் மகா கும்பாபிஷேகம்.., பக்தர்கள் தரிசனம்…

ByKalamegam Viswanathan

Dec 15, 2023
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில், குறிப்பிட்ட (ஸ்ரீவெலம நாயுடு) சமுதாயத்திற்கு பாதிக்கப்பட்ட, புதிதாக வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்ட ஸ்ரீ திம்மம்மா திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் கலச தீர்த்தங்களை வேத, விற்பன்னர்களால் பூஜிக்கப்பட்ட பின்பு,  கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு சம்ப்ரோஷணம் செய்தனர். இதனை தொடர்ந்து,  அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்களுக்கு கும்பாபிஷேகம் செய்த  கலசத் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது.  இதனிடையே யாகசாலையில் ஐம்பொன் சிலைகளாலான பழங்கால ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ அம்மன், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீஅனுமான் உள்ளிட்ட பல்வேறு சிலைகளை வைத்து பூஜை செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.