மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து ஆறுமுகம் திருக்கோவில் அருகே உள்ள சதுர்வேத மகா கணபதி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் முதல் காலயாக பூஜை தொடங்கி நடைபெற்றது இந்த நிலையில் நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜையும் மாலை மூன்றாம் காலயாக பூஜையும் நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணி அளவில் நான்காம் கால யாக பூஜை நடைபெற்று சரியாக காலை 9 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் சோழவந்தான் தச்சம்பத்து திருவேடகம் மேலக்கால் விவேகானந்த கல்லூரி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்து சென்றனர். தொடர்ந்து கோவில்வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.