மதுரை சிந்தாமணி பகுதியில் மேட்டு தெரு புஞ்சை, குருநாதர் கோவில் தெரு, நடுத்தெரு காளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் சுற்றி திரிந்த நான்கு இளைஞர்கள் போதையில் வாலுடன் தெருக்களில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை பயங்கர ஆயுதங்கள் கொண்டு அடித்து நொறுக்கி விட்டு சென்றனர். இளைஞர்களின் வெளிச்செயலால் ஐந்து ஆட்டோ ஒரு சரக்கு வாகனம் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கண்ணாடி முகப்பு ஆகியவை சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு 2 லட்சத்திற்கு மேல் ஆகும் என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், சமூகவிரத செயலால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கீழத்துறை காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தன.









