மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மகளிருக்கான எதிரான கொடுமைகளும் மார்க்கம் கூறும் தீர்வுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகளில் தற்காப்பு கலைகள் எ மூலம் பாதுகாக்க சிலம்பம் , சுழல்வாள் மூலம் பயிற்ச்சிகளை பெண்கள் சிறுமிகள் செய்து காட்டினர்.


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியில் மகளிருக்கான எதிரான கொடுமைகளும் மார்க்கம் கூறும் தீர்வுகக்கான விழிப்புணர்வு கூட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் மாநில தலைவர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது சிறப்புரையாற்றினார்.
பெண்களுக்கு எதிரான மார்க்கம் கூறும் விழிப்புணர்வுகளைகாதர்மைதீன், நஜ்மா பேகம், சேக்.முபாரக் நிஜாமுதின் அப்துல்ஹமீது ஆகியோர் கருத்துரையாற்றினர்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பாலியல் தொந்தரவுகளை தவிர்க்க பாதுகாக்க சிலம்பம், சுருள் வாள் பயிற்ச்சி மூலம் மாநில அளவில். நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகள் சிலம்பாட்டம் சுருள்வாள் மேடையில் சிறப்பாக செய்துபித்தனர்.
நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
சிறப்பு அழைப்பாளராக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்
விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் பங்கு குறித்த, தொல் திருமாவளவன் தெளிவாகவே ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார். முழுக்க, முழுக்க அரசியல் சாறாத ஒன்று இது அரசியல் தேர்தல் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல. இது தேர்தலுக்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல .
இதை நான் கள்ளக்குறிச்சி சென்ற போது கள்ளக்குறிச்சியில் மதுவால் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டதும் அவர்கள் அழுததும் அது என்னை பாதித்தது. அதனால் மதுவிற்கு எதிரான ஒரு பெண்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று நான் முடிவு எடுத்து அதன் அடிப்படையில் இது நடத்தப்படுகிறது என கூறியுள்ளார்.
பெண்களுக்கான பாலியல் கொடுமைகள் குறித்த கேள்விக்கு.? பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கக்கூடிய ஒரு மோசமான நிலை இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கான உலக அளவில் தலைநகரமாக இன்றைக்கு இந்தியா திகழ்வது மிகவும் ஒரு வேதனைக்குரிய ஒரு நிகழ்வு –
இதனை கடுமையான சட்டங்கள் கொண்டு வருவது மட்டுமல்ல இதிலே நீதித்துறை பல்வேறு விஷயங்கள் பாரபட்சமான ஒரு நடவடிக்கைகளும் இதில் இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படும்போது ஒரு நிலைப்பாடும் வேறு பெண்கள் பாதிக்கப்படும்போது இன்னொரு நிலைப்பாடும் எடுக்கக்கூடிய ஒரு மோசமான நிலையும் இன்றைக்கு இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம்.
உதாரணமாக சொல்லலாம்கடும் தண்டனைகள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது ஒன்று இன்னொன்று அந்த குற்றங்களை நிகழ்த்த வண்ணம் தடுத்து நிறுத்துவதற்கான ஒரு நல்ல சிந்தனையும்,விழிப்புணர்வையும் பெண்கள் குறித்த ஒரு நல்ல சிந்தனையையும் ஆண்கள் இடத்தில் கொண்டு வருவதற்கான பிரச்சார விழிப்புணர்வையும் கொண்டு வர வேண்டும் என்பது மனிதநேய மக்கள் கட்சி உடைய நிலைப்பாடு.
10 ஆண்டுகளில் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து?
பாஜக என்பது இந்த நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் இருக்கிறார் அவருடைய நிலைப்பாடு என்பது பெண்கள் பாதிக்கப்படும்போது அதற்கு ஒரு சரியான தீர்வை தர வேண்டும் என்கின்ற ஒரு நிலைப்பாட்டை இந்த அரசு எடுக்காததும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் எந்த முயற்சியிலும் இந்த அரசியல் படவில்லை என்பதுதான் இன்றைக்கு எதார்த்த உண்மையாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியாளர்கள் பெண்களுடைய நலனில் சரியான கவனம் செலுத்தாது தான் இந்த குற்றங்கள் அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம்.
இந்த ஆட்சியாளர்கள் பெண்களுடைய நலனில் சரியான கவனம் செலுத்தாது தான் குற்றங்கள் அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம் இது குறைக்கப்பட வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக வேண்டி தொடர்பிரச்சாரம் மேற்கொள்கிறோம்.
மனித நேய மக்கள் கட்சி தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் டோல்கேட் சாலை வரி நாம் கட்டினாலும் சுங்கச்சாவடி கட்டணம் என்ற பெயரில் ஒரு பகல் கொள்ளையை இன்றைக்கு ஒன்றிய பாஜக அரசு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு ஒன்றிய அமைச்சர்கள் உடைய உறவினர்கள் தமிழ்நாட்டினுடைய டோல்கேட் காலாவதியாலும் அந்த டோல்கேட் மூடாமல் தொடர்ந்து கட்டணங்களை வசூலித்துக் கொண்டிருக்க கூடிய ஒரு மோசமான நிகழ்வுகள் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கடிதம் எழுதி இருக்கிறார் அது குறித்து சட்டமன்றத்தில் எங்களுடைய தலைவர் பேராசிரியர் கேள்வி அளிப்பதற்கு அவரும் பதிலளித்திருக்கிறார் ஆனால் இதுவரைக்கும் ஒன்றிய அரசு 2 முறை டோல்கேட் கட்டணத்தை உயர்த்துவதை கண்டித்து மூலமாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து அந்த பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்க ஒன்றிய அரசிற்கு கோரிக்கை வைக்கிறோம் என அப்துல்சமது கறினார்.
பெண்களுக்கான நடைபெறும் கொடுமைகளுக்கு சட்டங்கள் மூலம் சரியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது தண்டிக்கப்பட வேண்டும். விசிக நடத்தும் மதுபோதை மாநாடு மகளிர்க்கான மாநாடு திருமாவளவன் நடத்துகிறார நான் வரவேற்கிறேன். எங்களுக்கு அழைப்பு வரவில்லை அழைப்பு வந்தால் கலந்து கொள்வோம். மதுபோதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் நடத்தவுள்ளோம் என தெரிவித்தார்.