மதுரை பாண்டி கோவில் அருகே மதுரை – தோண்டி சாலை, மதுரை சுற்றுச் சாலை மற்றும் திருச்சி – தூத்துக்குடி ஆகிய மூன்று முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் ரூ.53.12 கோடி மதிப்பில் 760 மீட்டர் தொலைவுக்கு பள்வழிச்சாலை மேம்பால பணி நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த மேம்பால பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பாலத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த பாலத்தின் மூலம் திருச்சியில் இருந்து தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள், மதுரை விமான நிலையம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து இடையூறு இன்றி செல்ல வசதியாக இருக்கும்.