• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்..பாரதியார் ஆசிரியராக பணியாற்றியது பெருமைக்குரியது..,பள்ளி தாளாளர் பேட்டி..!

ByKalamegam Viswanathan

Dec 11, 2023

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியார் 141 ஆவது பிறந்த தினம் பாரதி யுவகேந்திரா சார்பில் கொண்டாடப்பட்டது.
பள்ளியில் உள்ள பாரதியாரின் திருவுருவ சிலைக்கு சேதுபதி மேல்நிலைப்பள்ளி தாளாளர் பார்த்தசாரதி முன்னிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினார். ஆடிட்டர் சேது மாதவா, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு பாரதியாரின் கவிதை நூல்களை மாணவர்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் சேதுபதி மேனிலைப்பள்ளி தாளாளர் பார்த்த சாரதி செய்தியாளர்களிடம் கூறும்போது..,
பாரதியார் மிக குறுகிய காலம் இந்த சேதுபதி பள்ளியில் பணியாற்றி இருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் ஆசிரியர் பணியாற்றியது பெருமை பெற்றுள்ளது. வருடந்தோறும் பாரதியார் பிறந்த தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போன்று இன்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள், முக்கிய பிரமுகர்கள் பாரதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தி வருகின்றனர். மகாகவி பாரதியார் இந்த பள்ளியில் 121 நாட்கள் மட்டுமே பணியாற்றி இருக்கிறார்கள். அவர் வேலை தேடி மதுரை வந்த போது நல்ல தமிழ் இல்லை என்று புறக்கணிக்கப்பட்ட போது இந்த பள்ளி நிர்வாகம் அவருக்கு பணி வாய்ப்பு வழங்கியது.
இங்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றிய அரசன் சண்முக நாதன் பாரதிக்கு பணி செய்ய வழிவிட வேண்டும் என எண்ணி 4 மாத விடுப்பில் சென்று வழி விட்டார். அந்த விடுப்பில் பாரதியார் ஆசிரியராக இங்கு பணியாற்றியது பெருமைக் குரியது. பாரதியார், விவேகானந்தர், கணித மேதை ராமானுஜர் இவர்கள் எல்லாம் குறுகியகாலம் வாழ்ந்தாலும் சாதித்த விஷயங்கள் இன்றளவும் 150 ஆண்டுகள் கடந்தும் பேசப்படுகிறது. ஆகவே பாரதியாரின் பெருமையை போற்றுவோம் என்றார்.