• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திரு விழா பிட்டுக்கு மண் சுமந்த லீலை

Byகுமார்

Sep 6, 2022

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திரு விழாவின் முக்கிய பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியான இறைவன் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான ஆவணி மூலத்திருவிழா கடந்த 23 ம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது . விழாவையொட்டி தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார் .

இந்நிலையில் சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்களை விளக்கும் வகையில் நடைபெறும், இந்த ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் வைகை ஆற்றுபகுதியில் அமைந்துள்ள புட்டுதோப்பு சொக்கநாதர் திருக்கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது . முன்னதாக அருள்மிகு சுந்தரேஸ்வரர் , பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் மேல, தாளங்கள் முழங்க பரிவாரங்களுடன் எழுந்தருளினர் . அதே போன்று பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றத்திலிருந்து முருகப்பெருமானும் , திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகரும் மண்டபத்தில் எழுந்தருளிட தொடர்ந்து நடைபெற்ற பூஜைகளையடுத்து சொக்கநாதர் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த வீலை திருவிளையாடல் நடைபெற்றது. வெள்ளம் வரும் வைகையில் கரையை அடைக்காமல் சுவாமி தூங்குவது . அதனை பார்த்த மன்னர் பொற் பிரம்பால் சுவாமியை அடிப்பது போன்றவற்றை கோயில் பட்டர்கள் சுவாமியாகவும் , மன்னனாகவும் வேடமிட்டு திருவிளையாடலை அரங்கேற்றினர் , தொடர்ந்து சுந்தரேஸ்வரர் தங்க தட்டில் மண் சுமக்கும் கோலத்தில் பிரியாவிடையுடன் காட்சியளித்ததை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர் .

கொரோனா நோய் தொற்றால் இரண்டு ஆண்டுகாளக இங்கு விழா நடைபொறத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரகணக்கதன பக்தர்கள் அதிகாலையில் இருந்தே விழா நடைபெறும் புட்டுத்தோப்பில் குவிந்து இருந்து சுவாமி தரிசனம் செய்தனர் . இதனால் அப்பகுதியில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது . மேலும் விழாவை முன்னிட்டு பல வகை சுவைகொண்ட புட்டு விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது .