மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைது
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகராஜா இவர் பல்கலைகழகத்தில் வரலாற்றுத் துறையில் MA முதலாமாண்டு பயிலும் மாணவிகளிடம் ஜாதி ரீதியாக ஒருமையில் பேசி வருவதாகவும், தரக்குறைவாக பேசிவருவதாகவும் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி பாரதி என்பவர் மதுரை நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் பேராசிரியர் மீது புகார் அளித்தார்
அதனடிப்படையில் வழக்குபதிவு செய்த விசாரணை நடத்திய போலீசார் பேராசிரியர் சண்முகராஜா மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பேராசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைது
