

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி கார்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு முன்பு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டீஸ்வரி இளவரசன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஊரணி கரையில் மரக்கன்றுகளை நடுவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்பு வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊரட்சி மன்ற தலைவர் பாண்டீஸ்வரிஇளவரசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜி ராஜா, ஊராட்சி செயலாளர் ராஜபிரபு மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பொதுமக்களும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.