மகாராஜா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் மதுரையை கதைக்களமாக கொண்ட பெயரிடாத விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு மதுரை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மதுரை முனிச்சாலையில் உள்ள தினமணி டாக்கீஸ் பகுதியில் விஜய் சேதுபதி படப்பிடிப்பிற்காக வருகை புரிந்துள்ளார். இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவு என பார்க்காமல் அப்பகுதியில் விஜய் சேதுபதியை காண்பதற்கு குவிந்துள்ளனர்.
விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பு காட்சிகளை முடித்துவிட்டு காரில் சென்றிருந்தார் அப்போது விஜய் சேதுபதியை சுற்றி வளைத்து ரசிகர்கள் அவரிடம் கைகளை கொடுத்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.