• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை சித்திரை திருவிழா நீர்மோர் பந்தல் விழா…

Byகுமார்

Apr 29, 2024

மதுரை கலெக்ட்ர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச சட்ட உரிமைகள் மனித நீதி சபை சார்பில் சித்திரை திருவிழாவையொட்டி நீர் மோர் பந்தல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்க மாநில தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தார். அனைத்து மகளிர் மேம்பாட்டு கழக மாநில தலைவர் மஞ்சுளா தேவி, மாநில பொதுச் செயலாளர் கவிதா, துணை செயலாளர் கள்ளியம்மாள், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் வரவேற்றனர். விழாவில் சுமார் 5000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மாநில துணைத் தலைவர்கள் சமய செல்வம் , ஜான் ஜெயராமன், மாநில துணை செயலாளர்கள் பாண்டியன், முருகேசன், மாநில இணை செயலாளர்கள் ராஜேஸ் கண்ணன், கார்த்திக், மணிகண்ட ராஜா, அல்லா பக்ஸ், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மூர்த்தி, நாகேந்திரன், ஜான்சுந்தர், மணிகண்டன், சேவுகன், மாநில செய்தி தொடர்பாளர்கள் அஜித்குமார், ராமசாமி உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர். விழா முடிவில் மாநில பொருளாளர் புஷ்பராஜன் நன்றி கூறினார்.