அறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழி பலியிட தடைவிதித்து நீதிபதி ஸ்ரீமதி ரபித்த உத்தரவை உறுதிப்படுத்தி மூன்றாவது நீதிபதி விஜயகுமார் உத்தரவு.
திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் என்று அழைக்க வேண்டும் என்ற நீதிபதி ஸ்ரீமதி உத்தரவை உறுதிப்படுத்தி மூன்றாவது நீதிபதி உத்தரவு.

திருப்பரங்குன்றம் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தோம் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை சோலை கண்ணன், பரமசிவன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதே போல ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளுடன் மேலும் பலர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது மறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.
இதையடுத்து வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
கடந்த இரண்டு மாதமாக தனி நீதிபதி தனது விசாரணையை தொடர்ந்து நடத்தினார் இந்நிலையில் தனி நீதிபதி இன்று வழங்கி உள்ள தீர்ப்பில்.
இதில் ஆடு கோழி பலியிட தடை விதித்தும் இது குறித்து சிவில் நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தினார். இதே போல் இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானு உத்தரவை உறுதிப்படுத்தினார்.